கன்னட திரையுலகில் பான் இந்தியா படமாக வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்த படம் கேஜிஎப். இப்படத்திற்கு பிறகு இந்தியாவில் வெளியாகும் பல படங்கள் கேஎஜிப்பின் தாக்கத்தோடு தான் வெளியாகின்றன. ஆனால், கேஜிஎப் படத்தில் ராக்கி கதாப்பாத்திரத்தை அனைவரும் ரசிக்க தொடங்கிவிட்டனர். யஷ் இப்படத்திற்காக அபரீதமான உழைப்பை செலுத்தியிருப்பார். 50 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் இந்தியா முழுக்க 100 கோடி வசூல் செய்த முதல் கன்னட படம் என்ற சாதனையை படைத்தது.
இப்படத்திற்கு பிறகு வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் 1,000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது வெளியாகும் பான் இந்தியா படங்களுக்கு காட் பாதர் கேஎஜிப் என்று சொன்னாலும் தகும். இந்நிலையில், கேஜிஎப் படக்குழுவிற்கு ஒரு சோகமான செய்தி வந்திருக்கிறது. கே[ஜிஎப் படத்தில் ஷெட்டி கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் தினேஷ் மங்களூரு. கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் தினேஷ் மங்களூருவின் மரண செய்தி கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடுப்பி மாவட்டம் குந்தாபூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என கூறப்படுகிறது. மூளை பக்கவாதம் காரணமாக குந்தாபூர் மருத்துவமனையில் தினேஷ் மங்களூரு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் காலமானார். இவரது மறைவுக்கு கன்னட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், கேஜிஎப் படக்குழுவினரும் இரங்கல் தெரிவித்தனர்.