Upcoming Skoda Volkswagen Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் சார்பில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள கார்கள் குறித்து இங்கே அறியலாம்.

Continues below advertisement

ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகனின் புதிய கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார் மாடல்களுக்கு என, கணிசமான ஆதரவு உள்ளது. உள்நாட்டில் அவர்கள் முன்னெடுத்த 2.0 திட்டம் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்ததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிப்ட் எடிஷன் மற்றும் புதிய கார் மாடல்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினாலும், ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார்கள் இடம்பெற்றுள்ள செக்மெண்ட்களில் போட்டித்தன்மை தீவிரமாக உள்ளது. அதனை எதிர்கொள்ள நிறுவனங்கள் சார்பில் சந்தையில் உள்ள வெகுஜனங்களின் ஆதரவை பெற்ற,  குஷக், டைகுன், விர்டஸ் மற்றும் ஸ்லாவியா ஆகிய கார் மாடல்களின் அப்க்ரேட் எடிஷன்கள் அவசியமாகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் சார்பில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

1. ஸ்கோடா குஷக் ஃபேஸ்லிஃப்ட்

இந்திய சந்தைக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்ட குஷக் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை, 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாம். சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பலமுறை பொதுமக்களின் பார்வையில் இந்த கார் சிக்கியுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் டிசைன் அடிப்படையில், புதிய க்ரில்லுடன் கூடிய புதிய திருத்தப்பட்ட முன்பகுதி, புதிய எல்இடி விளக்குகள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. கூடுதலாக புதிய பம்பர் மற்றும் முற்றிலும் மறுவடிவாக்கம் செய்யப்பட்ட பின்புறபகுதி கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளன. 

காரின் உட்புறமும் லேசான அப்க்ரேட்களை பெற உள்ளது. மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி ஆனது கூடுதலாக 360 டிகிரி பார்கிங் கேமரா, பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS மற்றும் எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் உள்ளிட்ட பல புதிய அம்சங்களையும் பெற உள்ளதாம். இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி, அதே 1.0 லிட்டர் TSI மற்றும் 1.5 லிட்டர் TSI பெட்ரோல் ஆப்ஷன்கள் தொடர்கின்றன.

2. ஃபோக்ஸ்வாகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட்

அண்மையில் தான் மேம்படுத்தப்பட்ட டைகுன் எடிஷன் அண்மையில், இந்தியாவில் சாலை சோதனையின் போது சிக்கியது. இந்த காரானது குஷக் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் அறிமுகப்படுத்தப்படும் அதே காலகட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. இந்த காரின் வெளிப்புற டிசைனில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய முகப்பு விளக்குகள், திருத்தப்பட்ட பம்பர்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட க்ரில்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படலாம்.

எஸ்யுவியின் உட்புறத்தில் டேஷ்போர்ட் லே-அவுட்டில், சில சிறித்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சில புதிய அம்சங்களும் சேர்க்கப்படலாம்.  அதாவது லெவல் 2 ADAS, 360 டிகி கேமரா ஆகிய அம்சங்கள் வழங்கப்படலாம். இன்ஜினில் எந்தவித மாற்றமுமின்றி அதே 1.0 லிட்டர் TSI மற்றும் 1.0 லிட்டர் TSI EVO பெட்ரோல் ஆப்ஷனை தொடரக்கூடும்.

3. ஃபோக்ஸ்வாகன் டெய்ரன்

நீண்டகாலகாம எதிர்பார்க்கப்படும் டெய்ரன் கார் மாடலை, விழாக்காலத்தில் அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வாகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது தற்போதைய டைகுன் கார் மாடலின் 7 சீட்டர் எடிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதன் விலையும் அதிகமாக இருக்கும். MQB EVO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதால், இந்திய சந்தைக்கான டெய்ரன் மிகவுன் பரிட்சயமான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தக்கூடும்.  ஆல்-வீல் ட்ரைவ் வேரியண்டில் ஸ்டேண்டர்டாக 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. . முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக டெய்ரன் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால், இதன் விலை சுமார் ரூ. 50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

4. ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்

அடுத்த ஆண்டின் ஒரு பகுதியில் ஸ்கோடா ஸ்லாவியாவிற்கு மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வழங்கட உள்ளது. அதன்படி இந்த செடானில் கூடுதலாக சில அம்சங்கள் சேர்க்கப்படுவதோடு, காஸ்மெடிக் அப்டேட்களும் வழங்கப்பட உள்ளன. நிறுவனத்தின் சார்பில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் ஆகிய கார் மாடல்களை போன்ற, புத்துணர்ச்சி பெற்ற வெளிப்புற டிசைன் இடம்பெறலாம். கேபின் லே-அவுட்டிலும் சிறிய மாற்றத்தை எதிர்பார்ப்பதோடு, ADAS, 360 டிகிரி பார்கிங் கேமரா மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்  ஆகியவை வழங்கப்படலாம்.  இன்ஜினில் எந்தவித மாற்றமுமின்றி அதே 1.0 லிட்டர் TSI மற்றும் 1.0 லிட்டர் TSI EVO பெட்ரோல் ஆப்ஷனை தொடரக்கூடும்.

5. ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் ஃபேஸ்லிஃப்ட்

அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்படும் என்ற தகவல்களுக்கு மத்தியில், விர்டஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் போக்ஸ்வாகன் தீவிரம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மிட்-சைஸ் செடானுக்கான மிட்-லைஃப் அப்டேட்டில், மிக முக்கிய ஷீட் மெட்டல் மாற்றம் ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதாவது, முன்புற முகப்பு மற்றும் ரியர் ப்ரொஃபைலுக்கு திருத்தப்பட்ட டிசைனை புதிய எடிஷன் பெற உள்ளது. கூடுதலாக புதிய அலாய் வீல்கள், ADAS மற்றும் சற்றே திருத்தப்பட்ட கேபின் லே-அவுட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜினில் எந்தவித மாற்றமுமின்றி அதே 1.0 லிட்டர் TSI மற்றும் 1.0 லிட்டர் TSI EVO பெட்ரோல் ஆப்ஷனை தொடரக்கூடும்.


Car loan Information:

Calculate Car Loan EMI