ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் பேட்டிங்கின் போது தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் விளாசி 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக பெங்களூர் அணியின் எத்தனை வீரர்கள் இருந்தாலும் விராட் கோலிக்கு பிறகு முக்கிய வீரராக பார்க்கப்பட்டவர் ஏபிடிவிலியர்ஸ்தான். இப்பொழுது, டிவில்லியர்ஸ் பெங்களூர் அணியில் இல்லை. அவருடைய இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்றாலும், இந்தாண்டு ஓரளவு அவரது இடத்தில் தினேஷ் கார்த்திக் நல்ல ஃபினிசராக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், வெற்றிக்கு பிறகு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பெவிலியன் திரும்பும்போது ரசிகர் ஒருவர், இந்த வெற்றியை ஏபிடிக்கு டெடிக்கேட் பண்றீங்களா, பெங்களுர் அணியில் டிவில்லியர்ஸ் இடம் நிரப்பப்பட்டு விட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விராட் கோலி, பெங்களுர் அணியின் டிவில்லியர்ஸ் இடத்தை யாராலும், எப்பொழுதும் நிரப்ப முடியாது. அவர் இடத்தில் நான் மற்றும் தினேஷ் உள்பட மூன்று முதல் நான்கு பேர் சேர்ந்து நிரப்பி வருகிறோம் என்று தெரிவித்தார். தற்போது, விராட் கோலி பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.
2011ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் விளையாடி வந்தார். அவர் கடந்த ஐபிஎல் தொடருடன் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இது பெங்களூர் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் 184 போட்டிகளில் 3 சதம், 40 அரைசதங்கள் உள்பட 5,162 ரன்களை பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்