கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு சமீபத்தில் அறிவித்தது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.






இந்நிலையில், அமீர்கான் தயாரித்து நடிக்கும் லால் சிங் சத்தா படமும், யஷ் நடிக்கும் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமும் ஒரேநாளில் வெளியாவதால் எதாவது ஒரு படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டு, ஏப்ரல் 14-ம் தேதிதான் ரிலீஸ் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 






இதனால், கேஜிஎப்ஃ பட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், #KGFChapter2 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றது. எனவே, திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண