யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் 2  திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டாம் நாளில் இந்தியளவில் கே.ஜி.எஃப் திரைப்படம் 240 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களிலும் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அசுர வேகத்தில் புக் செய்யப்பட்டு வருகின்றன.


சென்னையை பொறுத்தவரை, படம் வெளியாகி மூன்று நாட்கள் கடந்தும் தியேட்டர்களில் டிக்கெட் கிடைப்பது அரிதான ஒன்றாகவே உள்ளது. அந்த அளவிற்கு சினிமா ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டர்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 






இந்த நிலையில் பிரபல திரைப்பட விமர்சகரான  ரமேஷ் பாலா, தனது ட்விட்டர் பக்கத்தில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம், இராண்டாம் நாளில் ஹிந்தியில் 44 கோடி வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையானது பீகார், உத்தரபிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் மொத்தமாக 95 லிருந்து 96 கோடி வரை வசுல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






கே.ஜி.எஃப் திரைப்படம் மொத்தமாக 10,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் 4000 திரையரங்குகளில் ஹிந்தியிலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் யஷ்ஷூடன் கதாநாயகியாக ஸ்ரீநிதி, வில்லனாக சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவனா கெளடா ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண