1200 கோடி வசூலை நெருங்கும் KGF-2
கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியான KGF- 2 திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 1,200 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளது.
வரவேற்பை பெற்றது:
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியானது KGF- 2 திரைப்படம். இதில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வசூலில் சாதனை:
KGF- 2 திரைப்படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலை தாண்டிய நான்காவது படம் என்ற சாதனையை KGF- 2 படைத்துள்ளது. இதற்கு முன் பாகுபலி, டங்கல், RRR ஆகிய படங்கள் ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலாகியிருந்தன.
இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் ரூ. 110 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. KGF- 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவலை பொழுதுபோக்கு வனத்துறை கண்காணிப்பாளர் மனோபாலா விஜய்பாலன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் KGF- 2 திரைப்படம் 1,104 கோடி வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளதாவது, KGF- 2 திரைப்படம் இந்தியில் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது பாகுபலி 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்த சாதனை திரைப்படமாகும்