தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் அதிவி சேஷின் 'மேஜர்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய வசனங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


பொதுவாக, பாலிவுட்டில் நடிக்கும் நடிகர்களுக்கு எப்படியாவது ஹாலிவுட் படங்களில் ஒரு காட்சியில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதேபோல், தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பாலிவுட் படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நடித்து விட மாட்டோமா என்ற ஏக்கம் அனைவரிடமும் இருக்கும். தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்று கலக்கியவர்கள் ஏராளம். அந்த வரிசையில் நடிகை ஸ்ரீ தேவி முதல் தனுஷ் வரை ஏராளமான பிரபலங்கள் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் அடித்து வந்துள்ளனர். 


இந்தநிலையில், பாலிவுட்டில் இருந்து தனக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்ததாகவும், அதை வேண்டாம் என்று கூறியதாகவும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது கூறியதுதான் டாப் ட்ரெண்டிங். அதிவி சேஷின் 'மேஜர்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் மகேஷ் பாபு கலந்துகொண்டார். அப்பொழுது மகேஷ் பாபுவிடம் பாலிவுட்டில் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.




இதற்கு பதிலளித்த அவர், ஹிந்தியில் இருந்து எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர்களால் என்னை வாங்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு துறையில் வேலை செய்து நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. இங்கு எனக்குக் கிடைக்கும் நட்சத்திர அந்தஸ்தும் மரியாதையும் மிகப் பெரியது, அதனால் என் இண்டஸ்ட்ரியை விட்டுவிட்டு வேறு துறைக்குச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார். 


தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு, 1989 ஆம் ஆண்டு தனது தந்தையுடன் நடித்த போரட்டம் திரைப்படத்தின் மூலம் குழந்தை நடிகராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் தனது தந்தையின் சங்காரவம் மற்றும் பஜார் ரவுடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1999 ஆம் ஆண்டு வெளியான ராஜா குமாருடு திரைப்படத்தின் மூலம் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு ஜோடியாக மகேஷ் பாபு தனது முழு நீள வெள்ளித்திரையில் அறிமுகமானார்.


கடந்த சில ஆண்டுகளில் மகேஷ் பாபு நடித்த அத்தாடு, போக்கிரி, அதிதி, தூக்குடு, ஸ்பைடர், பாரத் அனே நேனு மற்றும் மகரிஷி போன்ற சில திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடைசியாக, இவர் சரிலேரு நீக்கேவரு படத்தில் நடித்தார். தொடர்ந்து, இவரது நடிப்பில் சர்க்காரு வாரி பாட மற்றும் மேஜர் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண