தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில், திருவாரூர் மற்றும் கிருஷ்ணகிரி உதவி ஆணையர் அலுவலகங்களில் காலியாக அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Thiruvarur and Krishnagiri HRCE AC office recruitment 2022 என்ற தலைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.


இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. ஆகையால், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2022க்குள் விண்ணப்பிக்குமாறு வரவேற்கப்படுகின்றனர்.


பணியிடங்கள்:


அலுவலக உதவியாளர் (Office Assistant)


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 13


இதில் திருவாரூர் உதவி ஆணையர் அலுவலகத்தில் 4 இடங்கள் காலியாக உள்ளன.  கிருஷ்ணகிரி உதவி ஆணையர் அலுவலகத்தில் 9 இடங்கள் காலியாக உள்ளன.


கல்வித் தகுதி : அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இப்பணிக்கு சம்பளமாக ரூ. 15,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.50,000 வரை சம்பள உயர்வு பெற வாய்ப்புண்டு.


இரவுக் காவலர் (Night Watchman)


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


பணியிடம் : உதவி ஆணையர் அலுவலகம் கிருஷ்ணகிரி


கல்வித் தகுதி : இரவுக் காவலர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியடையாவிட்டாலும் கூட விண்ணப்பிக்கலாம். ஆனால், விண்ணப்பதாரருக்கு மிதிவண்டி ஓட்ட தெரிந்திருப்பது அவசியமான தகுதியாகக் கருதப்படுகிறது. மேலும், நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இப்பணிக்கும் சம்பளமாக ரூ. 15,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.50,000 வரை சம்பள உயர்வு பெற வாய்ப்புண்டு.


வயது வரம்பு என்ன? 01.07.2021 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.


இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :  https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/124/document_1.pdf என்ற  இணையதள பக்கத்தில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணியிடத்திற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :


திருவாரூர் உதவி ஆணையர் அலுவலகப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள்,  உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 2, புதுத்தெரு, மயிலாடுதுறை சாலை, திருவாரூர் – 610001 என்ற முகவரிகு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


கிருஷ்ணகிரி உதவி ஆணையர் அலுவலகப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, க.எண்: 1/304-4, 3-வது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி – 635002 என்ற முகவரிகு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.05.2022 ( மே 30 ஆம் தேதி)


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/124/document_1.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.