Just In





’அவன் குறுக்க போய்டாதீங்க சார்’ வசனம் பேசிய கேஜிஎஃப் நடிகர் மறைவு!
கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லன்களிடமிருந்து வயதான பார்வையற்ற நபரான கிருஷ்ணா ஜி ராவை ராக்கி பாய் காப்பாற்றும் காட்சிகள் மாஸாக அமைந்து அப்ளாஸ் அள்ளியது.

”நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்” எனும் ஒற்றை வசனம் மூலம் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் காலமானார்.
கேஜிஎஃப் படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்து கவனமீர்த்தவர் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ். முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரகத் தொற்று மற்று வயது தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ண ராவ், நேற்று நள்ளிரவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லன்களிடமிருந்து வயதான பார்வையற்ற நபரான கிருஷ்ணா ஜி ராவை ராக்கி பாய் காப்பாற்றும் காட்சிகள் மாஸாக அமைந்து அப்ளாஸ் அள்ளியது.
அதேபோல் இரண்டாம் பாகத்தில் ‘டூஃபான்’ பாடல் தொடங்கும் முன் “உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன். நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்” எனும் வசனம் திரையரங்குகள் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை ஆக்கிரமித்து ஹிட் அடித்தன.
மேலும் இந்தக் காட்சி அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.