உலகம் முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம் KFC. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் , பல கிளை நிறுவனங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.தென் ஆப்பிரிக்காவில் KFC நிறுவனம் ஆரமிக்கப்பட்டு 50 வருடங்கள் ஆகும் நிலையில் , அந்த நாட்டில் KFC SUPER FAN என்னும் போட்டியை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் KFC சிக்கன் மீது தாங்கள் கொண்ட ஈடுபாட்டினை விவரிக்கும் வகையிலான புகைப்படங்கள் , வீடியோக்கள் ,நடனம் , கவிதை போன்றவற்றை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து #KFCSuperfan என்ற முன்னெடுப்பு மூலம் @KFCSAடேக் செய்ய வேண்டும். அதில் சுவாரஸ்யமான வாடிக்கையாளர்கள் 12 பேருக்கு , தென் ஆஃப்ரிக்காவில் ஒருவருட KFC சிக்கன் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசுத்தொகையும் அறிவிப்பக்கப்பட்டுள்ளது.
தற்போது வாடிக்கையாளர்கள் போட்டியில் பலரும் முனைப்பு காட்டி வரும் சூழலில் Nokuzotha என்னும் இளம்பெண் kfc பேக்கிங் கவர் கொண்டு செய்திருக்கும் புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது. ”நாம் எவ்வளவு KFC சூப்பர் ரசிகர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்ட, மறுசுழற்சி செய்யப்பட்ட KFC பேக்கேஜ்களில் இருந்து KFCக்காக இந்த ஆடையை உருவாக்க முடிவு செய்தோம்.” என அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண்ணின் ஆடை வடிவமைப்பு பலரையும் கவர்ந்திருந்தாலும் , முதல் பரிசு Mhlongo என்பவருக்கு கிடைத்துள்ளது. காரணம் KFC சூப்பர் ஃபேன் என பதிவிட்ட ஆடையை அணிந்து கே.எஃப்,சி கடைக்கு சென்ற Mhlongo சிக்கன் மற்றும் பிற உணவுகளை வாங்குகிறார். பின்னர் அதனை அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்குகிறார். இந்த காட்சிகள் நெகிழ்சியாகவும் , KFC சிக்கனை புரமோட் செய்வதாகவும் அமைந்திருப்பதால் அவருக்கும் முதல் பரிசான R50 000 வழங்கப்பட்டுள்ளது.
இதனை அந்த நபரே தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து வெற்றிபெற்ற போட்டியாளர்களின் விவரங்கள் , கே.எஃப்.சி அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சில சுவாரஸ்ய போட்டியாளர்களை கீழே காணலாம்.