கேரளா ஸ்டோரி படத்தைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள ‘பஸ்தார்’ படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


தி கேரளா ஸ்டோரி


கடந்தாண்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று தி கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில், அதா ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த பெண்கள் ஏமாற்றப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்படுவதாக இப்படத்தில் கூறப்பட்டது. இதனால், இந்தப் படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.


பல மாநிலங்களில் இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டியதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த கூட்டணியில் உருவாகியுள்ள பஸ்தார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  


பஸ்தார்


கேரளா ஸ்டோரி படத்தைப் போல் பஸ்தார் திரைப்படமும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. இந்த டீசரில் அதா ஷர்மா பேசும் வசனங்கள் இடதுசாரிகளை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நக்ஸ்லைட் இயக்கத்திற்கு எதிராக பேசும் அதா ஷர்மா, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் இடதுசாரிகளை நடுத்தெருவில் வைத்து சுடுவேன் என்று பேசுகிறார். மேலும் பாகிஸ்தான் உடனான நான்கு மோதல்களைக் காட்டிலும் நக்ஸ்டைகளுடனான மோதலில் அதிக ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று அவர் கூறுகிறார்.


சத்தீஸ்கரில் இருக்கும் பஸ்தாரில் நக்சலைட்களால் 76 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொள்ளப் பட்டபோது டெல்லியில் இருக்கும் ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் அதை கொண்டாடியதை விமர்சித்துள்ளார்.  நக்சலைட்கள் இந்த தேசத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மாணவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். 






இந்த டீசரில் அதா ஷர்மா பேசியுள்ளதற்கு இடதுசாரிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற மார்ச் மாதம் 15ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கேரளா ஸ்டோரி படத்தைப் போல் இந்தப் படத்தை திரையரங்கில் வெளிடுவதை தடை செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கலாம். 




மேலும் படிக்க : Thalapathy 69: உறுதியாகும் விஜய் - வெற்றிமாறன் காம்போ? உற்சாகத்தில் ரசிகர்கள்!


Arthi Kumar: தமிழ் திரையுலகில் சோகம்.. சத்யராஜ் படங்களை இயக்கிய இயக்குநர் மரணம்