Keerthy Suresh Speech: 'இங்க பாருடி ஸ்டாலினோட பையன்’ .. உதயநிதியை கலாய்த்த கீர்த்தி.. கிருத்திகா கொடுத்த ரியாக்‌ஷன்..!

உதயநிதி ஸ்டாலினை அவரது முதல் படத்தில் நண்பர்களுடன் பார்த்து ரசித்ததை மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

உதயநிதி ஸ்டாலினை அவரது முதல் படத்தில் நண்பர்களுடன் பார்த்து ரசித்ததை மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ள படம் “மாமன்னன்”.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர உள்ளது. 

இந்த படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிலையி,  நடிகர்கள் கவின், சிவகார்த்திகேயன், சூரி, விஜயகுமார், தயாரிப்பாளர்கள் போனி கபூர், கலைப்புலி தாணு, கே.ஆர்., கே.ராஜன், இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, பாண்டிராஜ், தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், பிரியதர்ஷன் என பலரும் கலந்து கொண்டனர். 

உதயநிதியை கலாய்த்த கீர்த்தி சுரேஷ் 

இந்த படம் ஜூம் கால் மீட்டிங்கில் தான் ஆரம்பிச்சது. கொரோனா காலக்கட்டத்தில் தான் மாரி செல்வராஜை சந்தித்தேன். உங்களோட படத்துல எல்லா நடிகைகளும் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் உங்க படத்துல நடிக்க ஆரம்பித்த பிறகு, நாங்கள் நடிப்பு என ஒன்று செய்வோம்.  அதையெல்லாம் உடைத்து எங்களுக்கு வேற மாதிரி சொல்லிக் கொடுத்துருப்பீங்க. பெண்களுக்கு மாரி செல்வராஜ் கொடுக்குற முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

வைகைப்புயல் என வடிவேலுவை சொன்னவர்கள் எல்லாம், இந்த படத்துக்கு அப்புறமா மாமன்னன் என அழைப்பார்கள்.  ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நண்பர்கள் கூட பேசும் போது உங்க காமெடி படங்கள் தான் ரிப்ளை பண்ணுவோம். நீங்க எங்க எல்லோரையும் நிறைய சிரிக்க வச்சிருக்கீங்க. ஆனால் இந்த படத்துல ஒரு இடத்துலயாவது ஆடியன்ஸை நீங்க அழ வைத்து விடுவீர்கள். படம் பார்த்து விட்டேன். வேற மாதிரியாக நடித்துள்ளீர்கள். 

மதிப்பிற்குரிய அமைச்சர் உதயநிதி. உங்களை அப்படிதான் கூப்பிட வேண்டும். ஷூட்டிங்கில் என்னிடன், ‘இது என்னோட கடைசி படம் என்று சொன்னதால் தானே நடிக்கிற’ என கேட்டுக்கிட்டே இருப்பார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். நான் காலேஜ் படிக்கும் போது உங்கள் முதல் படத்தை பார்த்து ரசித்துள்ளோம். அப்போது நண்பர்களிடம், ‘ஏய்.. அங்க பாருடி.. ஸ்டாலின் அவரோட மகன் எப்படி அழகா இருக்காருன்னு பாரு’ என சொல்லிருக்கேன். அப்போது கிருத்திகா உதயநிதி கொடுத்த ரியாக்‌ஷன் ரசிகர்களிடையே சிரிப்பலையை வரவழைத்தது. 

உங்க சிரிப்புக்கு நான் என்றும் ரசிகர்கள் தான். ஃபஹத் ஃபாசிலுக்கு இந்த படம் தமிழில் மீண்டும் ஒரு நல்ல படமாக இருக்கும் என நம்புறேன்.  இந்த படத்தின் நான் கம்யூனிஸ்டாக வருகிறேன். இந்த மாதிரி ஒரு கேரக்டரை கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 

Continues below advertisement