நாள்: 02.06.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிநாடு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பழகும் விதங்களின் மூலம் ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முயற்சிகள் நிறைந்த நாள்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நிர்வாகம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சுற்றுலா செல்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இலக்கியம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பக்தி நிறைந்த நாள்.
கடகம்
பணிபுரியும் இடத்தில் நம்பிக்கையும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும். இறை சார்ந்த திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். இழுபறியான சில விஷயங்களை சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அடிப்படை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.
சிம்மம்
வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருக்கக்கூடிய நன்மை தீமைகளை அறிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
கன்னி
பேச்சு திறமைகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உணவு சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சிக்கல் நிறைந்த நாள்.
துலாம்
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பத்திரிக்கை தொடர்பான விஷயங்களில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பணிவு வேண்டிய நாள்.
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். அநாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். பழைய நினைவுகளால் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
தனுசு
வயதில் மூத்தோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கல்வி சார்ந்த செயல்களில் ஆர்வம் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நட்பு நிறைந்த நாள்.
மகரம்
மருத்துவம் தொடர்பான துறைகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இறை நம்பிக்கை சார்ந்த சிந்தனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். இளைய சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அலங்காரம் சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். சலனம் நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் இருக்கும் கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவையும், அறிமுகத்தையும் பெறுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய தெளிவு பிறக்கும். புரிதல் நிறைந்த நாள்.
மீனம்
மனதிலிருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பழைய சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். விவாதங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது மேன்மையை உண்டாக்கும். வாகன பயணங்களில் மிதவேகம் அவசியம். உற்பத்தி தொடர்பான வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சஞ்சலம் நிறைந்த சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.