திரையுலகில் அழகு தேவதையாக வலம் வரும் கீர்த்தி, தமிழ் திரையுலகில் 8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 



  • குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக மலையாளத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்த பைலட்ஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

  • மலையாள படங்களில் நடித்து வந்த இவர்,  2015ம் அண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 

  • 2016ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடிப்பில் அசத்திய கீர்த்தி சுரேஷ், அதே ஆண்டு சிவகார்த்திகேயன் படத்தில் அழகான டாக்டராக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். 





  • சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த கீர்த்திசுரேஷ் ரஜினி முருகன் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்பத்தி இருப்பார். 

  • 2017ம் ஆண்டு பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த சாட்டை படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்திய இவர் விஜய்யின் பைரவா படத்தில் விஜய்க்கு சரிசமமாக நடித்திருந்தார். 

  • தொடர்ந்து விஷாலுடன் சண்டைக்கோழி2, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விக்ரமனுடன் சாமி2 படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் விஜய்யுடன் சர்கார் படத்தில் இணைந்தார்.

  • முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை திரையுலகமே பார்த்து வியந்தது நடிகையர் திலகம் படத்தில் தான். தென்னிந்தியாவின்  நடிகையர் திலகம் என அழைக்கப்படும் சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.





  • நடிப்புக்கே பெயர் போன சாவித்ரி போல், அவரது ஒவ்வொரு அசைவுகளையும் மீண்டும் திரையில் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ். நவயுக சாவித்ரியை கண்முன் காட்டிய கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய விருது கிடைத்தது. 

  • சூரியாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், ஓடிடி தளத்தில் வெளியான மிஸ் இந்தியா, பெண் குயின்  படங்களிலும் நடித்திருந்தார். 

  • அடுத்ததாக 2021ம் ஆண்டு மோகன் லால் நடித்த வரலாற்று படமான மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம் படத்தில் வரலாற்று நாயகியாக நடித்து அசத்தினார். 

  • அண்ணாத்த படத்தில் ரஜினியின் பாசமான இன்னசெண்ட் தங்கையாக நடித்த இவர், செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த சாணிக் காயிதம் படத்தில் எதிரிகளை பழித்தீர்க்கும் பெண் சிங்கமாக மாறி நடிப்பில் அசத்தி இருப்பார். 





  • தற்போது திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்தில் பெண்ணியவாதியாக நடித்துள்ளார்.

  • தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கண்ணிவெடி, சைரன், ரிவால்வர் ரீட்டா படங்கள் வெளியாக உள்ளன. 

  • காதல், காமெடி, கிராமத்திய பெண், பாசமிகு தங்கை, வீரம், பெண்ணியம் என பல விதங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.