இன்று உலகம் எங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. வயது வித்தியாசமின்றி இன்று பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். திரைத்துறையிலும் இது சம்பந்தமான சர்ச்சைகள் அடிக்கடி எழுவதுண்டு. அதனை பொதுவெளிக்கு கொண்டு வரும் விதமாக MeToo இயக்கம் மாறியது. பல நடிகர்கள், இந்த இயக்கம் மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக வெளிக்கொண்டு வந்தனர். அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷூம் திரைத்துறையில் நிகழும் பாலியல் தொல்லைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறார்.
எனக்கு அது நடக்கவில்லை :
நடிகை கீர்த்தி சுரேஷ் இது குறித்து கூறுகையில் " என்னுடன் சினிமாவில் பணிபுரியும் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து என்னிடம் வெளிப்படையாக பேசியுள்ளனர். ஆனால் அது போன்ற ஒரு விஷயம் இதுவரையில் என்னக்கு நடக்கவில்லை. நான் எப்படிப்பட்டவள் என்பதை அனைவரும் அறிவார்கள். இதுவரையில் என்னை யாரும் அது ஒன்றை ஒரு தவறான எண்ணத்தில் நெருங்கியதில்லை. எதிர்காலத்தில் அது போல யாராவது வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி பாலியல் தொல்லை கொடுக்கும் விதத்தில் என்னை அணுகினால் அப்படிப்பட்ட வாய்ப்பே என்னக்கு தேவையில்லை என அதை நான் உதறி விடுவேன். சினிமாவே தேவையில்லை என வேறு வேலையை பார்த்து போய் விடுவேன்" என கூறியுள்ளார் நடிகர் கீர்த்தி சுரேஷ்.
திரை குடும்பத்தின் வாரிசு :
மலையாள திரையுலகின் தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் ஒரு திரை குடும்பத்தின் வாரிசாக தனது எட்டு வயதிலேயே திரை துறையில் அறிமுகமானவர். திரை வாரிசாக அறிமுகமானாலும் தனது யதார்த்தமான நடிப்பால் பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருக்கும் தோற்றத்தால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கீர்த்தி சுரேஷிற்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உண்டு. அவரின் நடிப்பு பசிக்கு தீனியாய் அமைந்தது நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட 'நடிகையர் திலகம்' திரைப்படம். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் 2019ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
மார்க்கெட் எகிறியது :
என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததற்காக பிறகு தான். அப்படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்ததை அடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து பல வெற்றி படங்களை கொடுத்த பிறகு அவரின் மார்க்கெட் பல மடங்கு எகிறிவிட்டது.
பிஸி ஷெட்யூல்:
கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா, சைரன், மாமன்னன் மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி ஹோம்பாலே நிறுவனத்தின் தயாரிப்பில் “ரகு தாத்தா” எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி அறிவிக்கப்படாத படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏராளமான திரைப்படங்களை எதிர்பார்க்கலாம் என்பதால் ஆனந்தத்தில் இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.