இந்த ஆண்டு பிபிசியின் ‘100 பெண்கள்’ பட்டியலில் இடம்பிடித்த நான்கு இந்தியர்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர்.தொடக்கத்தில் தனக்கு எதுவும் எளிதாக அமைந்துவிடவில்லை என்று அண்மையில் அது தொடர்பான பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை பற்றி மனம் திறந்துள்ளார். பாலிவுட்டில் தனது ஆரம்ப நாட்களில் ஆண் கதாநாயகர்களுக்கு இணையான சம்பளம் பெறவில்லை என்றும், திரைப்படம் எடுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்களில் ஆண்கள் எப்படி சிறப்புச் சலுகைகளைப் பெற்றார்கள் என்றும் அவர் அதில் பேசியிருந்தார்.






"எனக்கு பாலிவுட்டில் சம்பளம் சமமானதாக இருந்ததில்லை. எனது ஆண் சக நடிகரின் சம்பளத்தில் 10 சதவிகிதம்தான் நான் பெறுவேன். அந்த சம்பள இடைவெளி அதிகம், கணிசமாகப் பெரியது. இன்னும் கூடப் பல பெண்கள் அதை எதிர்கொள்கிறார்கள். நான் இப்போது பாலிவுட்டில் ஒரு ஆண் சக நடிகருடன் பணிபுரிந்தால் எனக்கும் அதே நிலைதான்," என்று அவர் கூறினார்.மேலும், "எனது தலைமுறை பெண் நடிகர்கள் சம ஊதியம் கேட்டோம், நாங்கள் உரக்கவே கேட்டோம், ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை." என்றார் அவர். 


 






பிரியங்கா தற்போது நடிகர் சாம் ஹ்யூகனுடன் இணைந்து லவ் அகைன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்,