ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் திரைப்படம் 'தசரா'. நானி - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூரியன் ISC மேற்கொள்ள இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். 


 



தூம் தாம் தோஸ் தான் - தசரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்



ஃபர்ஸ்ட் லுக் - ஃபர்ஸ்ட் சிங்கிள்:


ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் படமான தசரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தாம் தூம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய திரைப்படமாக மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ளது தசரா திரைப்படம். 


 






 


BTS லுக்கில் கீர்த்தி சுரேஷ் - நானி :


கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தசரா படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ள கீர்த்தி சுரேஷ் சோசியல் மீடியாவிலும் எப்போதுமே ஆக்டிவ். கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அதற்கு அழகான ஒரு குறிப்பையும் பதிவிட்டுள்ளார். " சில படங்கள் நமது வீட்டின் கதவை தட்டி 'ஏய்! நான் உன் தொப்பியில் இறகாக அலங்கரிப்பேன் என சொல்லும். அப்படி ஒன்று தான் தசரா திரைப்படம் - அன்போடு வெண்ணிலா' என்ற குறிப்போடு தசரா படத்தில் கீர்த்தியின் லுக்கில் பழைய மாடல் ஸ்கூட்டரை ஓட்டி வருவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  


 






அதோடு கீர்த்தி சுரேஷ் மற்றும் நானியின் BTS புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தசரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் நானி.