பாலிவுட்டின் 'பிக் பி' அமிதாப் பச்சனின் பிரபலமான டிவி ஷோ 'கௌன் பனேகா க்ரோர்பதி'. நம்ம ஊரில் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்பதன் இந்தி வெர்ஷன். தற்போது இந்த நிகழ்ச்சி 13-வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை தீபிகா படுகோனும் திரைப்பட இயக்குனர் ஃபரா கானும் இணைந்து கலந்துகொண்டது பாலிவுட் டவுனில் பரபரப்பாக இருந்தது.



இந்நிலையில் கோன் பனேகா கோரோபதிபதி தொகுப்பாளர் அமிதாப் பச்சன், திரைப்பட தயாரிப்பாளர்-நடன இயக்குனர் ஃபரா கான் நிகழ்ச்சியில் பங்குபெற்ற காரணத்திற்காக பணப் பங்களிப்பை வழங்க விரும்புவதாக அறிவித்தார். அதற்கு ஃபரா கான், இந்த நிகழ்ச்சியில் நான் சம்பாதிக்கும் எந்த பணமாக இருந்தாலும் அதனை குழந்தையின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அரிய நோயான ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு மிகவும் விலையுயர்ந்த ஊசி வாங்குவதற்கு செலவிட விரும்புவதாக ஃபரா கூறினார். கோன் பனேகா கோரோபதி சீசன் 13 வெள்ளிக்கிழமை எபிசோடில் ஃபரா கான் தீபிகா படுகோனுடன் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பிரபல விருந்தினர்கள் பொதுவாக தங்கள் விருப்பத்திற்காக, எதோ ஒரு நோக்கத்துக்காக பணம் கொடுக்க விளையாடுவார்கள். அப்படி ஃபரா கான் அந்த அறிய நோய்க்கான ஊசி வாங்குவதற்கான நிதியாக அறிவித்தார்.


இன்ஸ்டாகிராமில் சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி பகிர்ந்த ஒரு புதிய விளம்பர வீடியோவில், அமிதாப் ஹிந்தியில், "மக்களே, நோயால் அவதியுற்று வரும் 17 மாத குழந்தைக்காக ஃபரா விளையாடுகிறார்" என்று கூறினார். அந்த வீடியோவில் அயான்ஷ் மற்றும் அவரது தாயார், ஏழு மாதங்கள் ஆன பிறகும் குழந்தையால் கை, கால்களை அதிகம் அசைக்க முடியாமலிருப்பதை கவனித்ததாக கூறினார்கள். அவரை பரிசோதித்த பிறகு, அவர் SMA நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



கண்ணீருடன் ஃபாரா ஹிந்தியில், “அயான்ஷுக்கு இரண்டு வயதாகும்போது, ​​ஸோல்கென்ஸ்மா என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்த வேண்டியுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஊசி. இதன் விலை ரூபாய் 16 கோடி. மேலும் அது இருந்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த குழந்தையை நாங்கள் காப்பாற்ற விரும்புகிறோம்." என்று கூறினார். அமிதாப், “நான் இதைச் சொல்ல வேண்டுமா என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஃபாரா, நான் தனிப்பட்ட முறையில் இதற்காக பங்களிக்க விரும்புகிறேன். அந்த தொகையை நான் பின்னர் சொல்கிறேன், நான் அதை இங்கே விவாதிக்க விரும்பவில்லை.” என்றார். ஃபரா தனது கைகளை இணைத்து தனது நன்றியை வெளிப்படுத்தினார். "சார், உங்களுக்கு மிகவும் நன்றி," என்று அவர் கூறினார். அமிதாப் பார்வையாளர்களிடமும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.