வைரமுத்து ராமசாமி பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நாவலாசிரியராக  தமிழ் திரைப்பட துறையில் பணிபுரிகிறார். தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்தவர். அவரது 40 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில், அவர் 7,500க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதியுள்ளார்.இது அவருக்கு ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ளது. அவரது ஏராளமான இலக்கிய வெளியீட்டிற்காக அவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் சாகித்ய அகாடமி விருது,ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று கல்லிக்காட்டு இதிகாசம்.






கள்ளிக்காடு என்ற வறண்ட நிலத்தில் நடமாடும் மனிதர்களின் வாழ்க்கையை எந்த வித அலங்காரப் பூச்சும் இல்லாமல் அப்படியே நம் கண்முன் நிறுத்திய நாவல்தான் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம். பேயத்தேவர் என்ற கதாபாத்திரத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒரு கிராமத்து கதைதான் அது. தமிழில் மிகவும் பிரபலமான நாவல் ஆகும்.


வைரமுத்தும் தனது குழந்தைப் பருவத்தில் இந்த இடம்பெயர்வின் துயரத்தில் வாழ்ந்தவர் தான். மாடனைசேஷன் விளைவாக கிராம மக்களின் கண்ணீர், இரத்தம் மற்றும் வலியை இக்கதை சித்தரிக்கிறது. 2003 ஆம் ஆண்டு சிறந்த இலக்கியப் படைப்பிற்கான சாகித்ய அகாடமி விருதை வைரமுத்துவிற்கு இக்கதை வென்றுகுடுத்தது. இந்த நாவல் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றது.






கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி - உருது -மலையாளம் - கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது; கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார்.


துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.


மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத் தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள்.