Just In





Kavin: லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கவின்? லோகேஷ் கனகராஜ் டீம்.. வெளியான மாஸ் தகவல்!
Kavin Next Movie: லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கவின்
இளன் இயக்கத்தில் கவின் (Kavin) நடித்து கடந்த மே 10ஆம் தேதி வெளியானது ஸ்டார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம் 3 நாட்களில் ரூ.15 கோடி வசூலித்து தற்போது இரண்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. டாடா தற்போது ஸ்டார் என அடுத்தடுத்த இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் நடிகர் கவின். அடுத்தபடியாக நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கும் ப்ளடி பெக்கர் படத்தில் நடிக்க இருக்கிறார் கவின். இப்படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்தது.
இப்படத்தினைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிக்க இருக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து கவின் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நயன்தாராவுக்கு ஜோடியாகும் கவின்?
லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ‘நாயகன் மீண்டும் வரான்’, லியோ படத்தில் ‘நான் ரெடிதான் வரவா’ ஆகிய பாடல்களை விஷ்ணு எடவன் எழுதியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தனது முதல் படத்தின் வேலைகளைத் தொடங்க இருக்கிறார். இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறதாம்.
விஜய்யின் மாஸ்டர், விக்ரம் நடித்த மஹான் மற்றும் கடந்த ஆண்டு வெளியான லியோ படங்களைத் தயாரித்த 7 ஸ்கிரீன் நிறுவனம் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் எல்.ஐ.சி படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : VJ Archana: அந்த ஒரு விஷயத்துல என்னை கட்டுப்படுத்த முடியல.. வெளிப்படையாக பேசிய விஜே அர்ச்சனா!