சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் அறிமுகமானவர் அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு அவரின் பப்ளிசிட்டி பல மடங்காக எகிற பட வாய்ப்புகளும் குவிந்தது. 'லிஃப்ட்' படத்தின் மூலம் கதாநாயகனான கவினுக்கு அப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரானார் கவின்.
ஸ்டார் படத்தில் கவின் :
'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமான இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. கவின் நடிப்பில் கடைசியாக வெளியான 'டாடா' திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவரின் அடுத்த படமான 'ஸ்டார்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'ஸ்டார்' செகண்ட் சிங்கிள் :
பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 'வின்டேஜ் லவ்...' பாடல் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அடுத்த பாடலான 'மெலடி' பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
ஏற்கனவே வெளியான 'ஸ்டார்' படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இந்த மெலடி பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் ஸ்டார் படத்தின் 'மெலடி' பாடலின் வீடியோ சாங் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் மிகவும் வித்தியாசமாக நடிகர் கவின் பெண் கெட்டப்பில் குத்து குத்தி நடனமாடியுள்ளார்.
பெண் கெட்டப்பில் கவின் இருக்கும் புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கவின். இதை பார்த்த ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், பிரஷாந்த், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வரிசையில் வளரும் நடிகரான கவின் பெண் வேடமிட்டுள்ளது வரவேற்பைப் பெற்று வருகிறது.