கரூரில் 2 திரையிரங்குகளில் விஜய் நடித்த "கில்லி" திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. காலை காட்சிக்கு விஜய் ரசிகர் ரசிகைகள் திரையரங்கில் திரண்டதால் ஹவுஸ் புல் ஆனது.




 


கரூரில் உள்ள அமுதா திரையரங்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, இன்று மாநகராட்சிக்குட்பட்ட அமுதா மற்றும் அஜந்தா ஆகிய இரண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக அமுதா திரையரங்க மேலாளர் தெரிவித்தார்.


 




 


திரையரங்கில் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர். காலையிலேயே வரிசையில் நின்று படம் பார்ப்பதற்கான நுழைவு கட்டண டிக்கெட்டை பெற்றுக் கொண்டு திரையரங்குகளுக்குள் சென்ற நடிகர் விஜயின் ரசிகர்களான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என குடும்பம் குடும்பமாக திரைப்படத்திற்கு வந்து கொண்டாடி வருகின்றனர்.


 




 


கரூரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீ ரிலீசான திரைப்படங்களில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கில்லி திரைப்படத்திற்கு மட்டுமே இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.