நடிகர்கள் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்ததில் இருந்து பாலிவுட் வட்டாரம் பரபரப்பாக பேசப்படும் நபர்களாக மாறினர். தீபாவளி தினத்தன்று மும்பையில் உள்ள இயக்குனர் கபீர் கானின் இல்லத்தில் இருவரும் ரோகா விழாவை நடத்தியதாக கூறப்படுகிறது. ரோகா விழா என்பது வட இந்தியாவில் நடத்தப்படும் ஒரு வித நிச்சயதார்த்த நிகழ்வு ஆகும்.






டிசம்பர் 9ம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருமணத்துக்கு அழைக்கப்படும் விருந்தினர்களுக்கே பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 



  • திருமணத்துக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்ற தகவலை வெளியிடக்கூடாது

  • திருமண அரங்குக்குள் புகைப்படம் எடுக்கக் கூடாது

  • திருமணம் தொடர்பான லொகேஷன், புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிரக் கூடாது

  • திருமணத்துக்கு வந்தவர்கள் வெளியேறும் வரை வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்கக் கூடாது

  • திருமண ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி பெற்ற பிறகே புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிரலாம்

  • திருமண அரங்குக்குள் ரீல்ஸ் எடுப்பதோ,வீடியோ எடுப்பதோ கூடாது


 எனக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஒமிக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் அது தொடர்பான கட்டுப்பாடுகளும் அதிகம் இருக்குமென தெரிகிறது. குறிப்பாக பலர் வெளிநாட்டில் இருந்து வருவார்கள் என்பதால் அதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், திருமணத்துக்கு வருபவர்களுக்கு ரகசிய எண்கள் கொடுக்கப்படும் என்றும், இந்த எண்களை குறிப்பிட்டுத்தான் திருமணம் நடக்கும் இடத்துக்குள் நுழைய வேண்டும் எனவும் தகவல் கசிந்துள்ளது. 


 






விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃபின் திருமண விழாக்கள் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரை ராஜஸ்தானின் ரன்தம்போர் தேசிய பூங்காவிலிருந்து 30 நிமிடங்கள் தொலைவில் உள்ள சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பார்வாரா என்ற ரிசார்ட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணமகனும், மணமகளும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஆன சப்யாசாச்சி தயார் செய்யும் ஆடைகளை அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.