மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, தனது நிறுவனத்தின் 50% பங்குகளை விற்றுள்ளார். நவம்பர் மாதத்தில் மட்டும் பல தொகுப்பளாக 840,000 பங்குகளை 285 மில்லியன் அமெரிக்கா டாலருக்கு விற்றிருப்பதாக பங்குச் சந்தையில் அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களில் மூலதனம் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு மீதான மூலதன வரியை அமெரிக்கா அரசு இயற்றியுள்ளது. இதன் காரணமாக, பணக்காரர்கள் தங்களது பங்குகளின் விலை உயரும்போது, அதை அவர்கள் விற்காவிட்டாலும்கூட அதற்காக அவர்கள் வரி கட்ட வேண்டியிருக்கும் என்பது விதி. இச்சட்டம் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்க நாட்டின் செல்வந்தர்கள் தங்கள் பங்குகளை விற்று வருகின்றன.
முன்னதாக, டெஸ்லா நிறுவனத் தலைவர், எலான் மாஸ்க், தனது வைத்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் 10% பங்குகளை விற்பனை செய்தார். விற்ற பங்கின் விலை மட்டும் 20 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.5 லட்சம் கோடி) மதிப்புடையதாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. பங்குகள விற்பதற்கு முன்னாள், எலான் மஸ்க் தனது ட்விட்டரில், நான் எங்கிருந்தும் ரொக்கமாகச் சம்பளம் அல்லது போனஸ் பெறவில்லை. என்னிடம் பங்குகள் மட்டுமே உள்ளன. எனவே நான் தனிப்பட்ட முறையில் வரி செலுத்துவதற்கான ஒரே வழி பங்குகளை விற்பதுதான்" என்று பதிவிட்டார்.
இந்நிலையில், தனது தனிப்பட்ட ஆதார வளங்களை திறமையாகப் பயன்படுத்தும் நடவடிக்கையாக சத்ய நாதெள்ளா தனது பங்குகளை விற்றுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
2014-ஆம் ஆண்டில் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்ய நாதெள்ளா பதவி வகித்து வருகிறார். அதேபோல் மைக்ரோசாப்ட்டின் புதிய தலைவராக ஜான் தாம்சன் தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவி வகித்த பில்கேட்ஸ் இனிமேல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க:
டெஸ்லா பங்கை விற்றது எதனால்: விற்கும் முன் ட்விட்டரில் வாக்கெடுப்பு வைத்த எலன் மஸ்க்!