பாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப் தனது திருமணத்தில் அரங்கேறிய சண்டை பற்றி பேசியிருக்கிறார். 


பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாகவும், தம்பதியாகவும் இருப்பவர்கள் கத்ரீனா - விக்கி கெளசல் ஜோடி. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதேபூரில் இருக்கும், ஹோட்டல் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடந்தது. 






இந்த நிகழ்வில் இருவீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள், அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்ட அவர்கள் அதன்பின்னர், தத்தமது வேலைகளில் பிஸியாகினர். இவர்களது முதலாமாண்டு திருமண நாள் அடுத்த மாதம் கொண்டாப்பட இருக்கும் நிலையில், தனது திருமண நிகழ்வில் செருப்பை ஒளித்து வைத்து விளையாட்டின் போது நடந்த சண்டை பற்றி நடிகை கத்ரீனா பேசியிருக்கிறார்.






பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான கபில் ஷர்மா நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய அவர், “  எனது பின்னால் பயங்கர சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. திரும்பி பார்த்த போது அனைவரும் சண்டையிட்டுக்கொண்டு ஷூவை தங்கள் பக்கம் நோக்கி இழுத்துக்கொண்டிருந்தனர். அங்கு என்னுடைய சகோதரிகளும், விக்கியின் நண்பர்களும் இருந்தனர். அவர்கள் உண்மையில் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்” என்றார். சரி, இறுதியில் யார்தான் வென்றார் என்று கேட்ட போது, அதற்கு பதிலளித்த கத்ரீனா தெரியவில்லை.. நான் அப்போது பிஸியாக இருந்ததாக பேசினார். கத்ரீனா தற்போது சல்மான் கானின் டைகர் 3, ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் மேரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களை கைவசம்  வைத்திருக்கிறார்.