பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் எனும் வதந்தி பரவி வருகிறது. மும்பை விமான நிலையத்தில் லூஸான ப்ளூ டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்டில் காணப்பட்ட கத்ரீனா கைஃப் மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்கி:
கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணம் 2021-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அவர்களுக்கு திருமணம் முடித்த ஆறு மாதத்திலேயே கர்ப்பமாக இருக்கிறார் என வதந்திகள் காட்டுத்தீ போல பரவின. இது குறித்து விக்கி கௌஷல் தெரிவிக்கையில் அது வெறும் வதந்தி என உறுதிப்படுத்தினார். தற்போது இருவருமே நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் சிறிது காலம் எங்களது திருமண வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறோம். தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அந்த வகையில் சிறிது காலத்திற்கு இது போன்ற வதந்திகளை பரப்புவது நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அது தொடங்கிவிட்டது.
விமான நிலையத்தில் கத்ரீனா கைஃப்:
கத்ரீனா கைஃப் மும்பை விமான நிலையத்தில் லூசான ஒரு டி ஷர்ட் மற்றும் பேண்டில் காணப்பட்டவுடன் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என மீண்டும் வதந்தியை பரவி வருகிறது. அவர் விமான நிலையத்திற்கு வருவதை வீடியோ எடுத்து "ஒருவேளை கர்ப்பமாக இருக்கலாம்' என யூகித்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.
சமீபத்தில் தான் கத்ரீனா கைஃப் நடிப்பில் ஹாரர்-காமெடி திரைப்படமான போன் பூத் திரைப்படம் வெளியானது. அப்படம் ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் உடன் டைகர் 3ல் நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் கத்ரீனா கைஃப்.