பாலிவுட்டில் அதிகம் கிசுகிசுக்கப்படும் நடிகைகளில் ஒருவராக கத்ரீனா கைஃப் உள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூருடன் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். தற்போது, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ புகழ் விக்கி கவுஷலுடன், கத்ரீனா கைஃப் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. கசிந்த தகவல்கள் காதலோடு மட்டுமே நின்றுவிடவில்லை. அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஆகஸ்ட் மாதம் சோஷியால் மீடியாவே பரபரப்பாக பேசப்பட்டது.
அவர்கள் இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படங்களை பதிவிட்டு பலரும் முடிந்தது நிச்சயதார்த்தம் என பதிவிட்டு வந்தனர். ஆனால் அன்றைய தினமே நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக நடத்தப்படும் ரோகா விழாவும் நடக்கவுள்ளதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து, இருவரின் ரசிகர்களும் இணையத்தில் இது தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வந்த நிலையில், இது பொய்யான தகவல் என்று கத்ரீனாவின் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஹர்ஷவர்தன் கபூர், விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைஃப் பற்றிய உறவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Ajith Latest Photo: அபாய பாறையில் அகாய சூரனாய் அஜித்... தலை சுற்ற வைக்கும் இடத்தில் ‛தல’ !
இரு மாதங்களாக சத்தமில்லாமல் கிடந்த இந்த விவகாரத்தில் மறுபடி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விக்கி கவுசலும் கத்ரினா கைஃபும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்யப்போவதாக பாலிவுட் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் உண்மையாகவே நிச்சயதார்த்தம் நடந்தது எனவும் அது பஞ்சாபி முறைப்படி நடந்தது என்றும் கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் போலவே திருமணமும் பஞ்சாபி முறைப்படியே நடக்கும் என தகவல் கசிந்துள்ளது. இருதரப்புமே திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியாகாத நிலையில் திருமண செய்திகள் மட்டுமே ஒவ்வொரு மாதமும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தன் திருமணம் செய்தி குறித்து பாலிவுட் லைஃப் இணையப்பக்கத்துக்கு பேசிய கத்ரீனா, 'அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. எந்த திட்டமும் இல்லை. இதே கேள்வியை நான் 15 வருடங்களுக்கு மேலாக கேட்டுக்கொண்டே இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் முதன்முறையாக ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் சந்தித்தனர். பின்னர், இருவரும் ஓரிரு முறை சந்தித்த பிறகு டேட்டிங் செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் பல சமயங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். திருமணம் வரை கிசுகிசுக்கப் பட்டாலும் இருவரும் இணைந்து எந்த திரைப்படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்