ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. 'துணிவு திரைப்படத்தை' காட்சிப்படுத்த தமிழ் நாட்டில் உள்ள திரையரங்கங்களை புக்கிங் செய்ய தொடங்கியது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.
காசி கலையரங்கத்தில் 'துணிவு' :
அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேட் என்வென்றால் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமான தியேட்டரான காசி கலையரங்கத்தில் 'துணிவு;' திரைப்படம் காட்சிப்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பது தான் அந்த இனிய செய்தி. துணிவே துணை! 'துணிவு' திரைப்படத்துக்கு ஆதரவாக இருந்த காசி கலையரங்கத்தின் உரிமையாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளது 'துணிவு' படக்குழு. இந்த தகவல் ரசிகர்களுக்கு குறிப்பாக கும்பகோணம் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூவரின் கூட்டணி என்றுமே வெற்றி கூட்டணி :
ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த மூவரின் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படம் பொங்கல் ரிலீஸாக உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் அதுவும் பொங்கல் ரிலீஸாக வெளியாக உள்ளது என்பதால் பரபரப்போடு காணப்படுகிறார்கள் திரை ரசிகர்கள். துணிவு மற்றும் வாரிசு இந்த இரு படங்களையும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'சில்லா சில்லா' பாடல் சமீபத்தில் வெளியாகி ஏரளமான வியூஸ் பெற்று சூப்பர் ஹிட் பாடலாக ட்ரெண்டிங் பிளே லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.
மும்மரமாக நடைபெறும் பணிகள் :
துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் ஜோடியாக நடித்துள்ளார் மலையாள நடிகையான மஞ்சு வாரியர். மேலும் இவர்களுடன் சமுத்திரகனி, ஜான் கோக்கன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். துணிவு படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் திரை ரசிகர்கள்.