பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு இந்திய திரையுலகினர் பலரும் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் கிருஷ்ணா 1970களில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக மாறினார். தெலுங்கின் தற்போதைய முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபுவின் தந்தையான இவர் 1961ஆம் ஆண்டு முதல் இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, இயக்கம் ஆகிய துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். 


இதனிடையே 79 வயதான நடிகர் கிருஷ்ணாவுக்கு நேற்று அதிகாலை (நவ.14) மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை கிருஷ்ணா உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் நடிகர்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், சிபி சத்யராஜ், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.