சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் ‘கசடதபற’. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கசடதபற திரைப்படம் ஒரு ஆந்தாலஜி திரைப்படமாக உருவாகியுள்ளது என செய்திகள் வெளியான நிலையில் படக்குழு தற்போது அதனை மறுத்துள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள போஸ்ட் ஒன்றில் “மறுபடியும் மறுபடியும் சொல்லுறோம் இது ஆந்தாலஜி படம் இல்ல” என குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. படத்தில் வெங்கட் பிரபு, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி,பிரேம்ஜி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். எனவே கசட தபற ஒரு ஹைப்பர்-லின் படமாக இருக்கலாம். ஹைப்பர் லிங் திரைப்படம் என்பது படத்தில் வெவ்வேறு இடங்களில் பயணிக்கும் கதாபாத்தி்ரங்களை, அதாவாது ஒருவருக்கொருவர் பரீட்சியம் இல்லாதவர்களை கதையுடன் பயணிக்க வைத்து கிளைமேக்ஸ் காட்சியில் ஒன்றிணைப்பது. உதாரணமாக சிம்பு , அனுஷ்கா, பரத் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான வானம் படத்தை கூறலாம்.
கசட தபற படத்தின் டீஸர் சமீபத்தி வெளியானது.நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குறது இரண்டு அறிவியல் கோட்பாடுகள்தான் என கௌதம் வாசுதேவ் மேனன் குரலில் ஒலிக்கிறது இந்த டீசர். அடுத்தடுத்த காட்சி விளக்கங்களில் “இங்க மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கவரைக்கும் தப்பு பண்ணாம மாட்றவங்களும் இருக்கத்தான் செய்வாங்க “ அதேபோல “இந்த ஊர்ல திறமையில்லாத பணக்காரர்களுக்கு கிடக்கிற வாய்ப்பு திறமையான ஏழைகளுக்கு கிடைக்கிறதில்லை” போன்ற வாக்கியங்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது இது குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.