சூரி நடித்த  'விடுதலை' படத்திற்கு  கரூரில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.




இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வின்னர் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான சூரி, வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் பரோட்டா சூரியாக பிரபலமடைந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை தோற்றத்தில் படங்களில் இடம் பெற்றார். 


இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டு, படப்பிடிப்பு நிறைவு பெற்று கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.


 




 


அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடிகர் சூரி நடித்த விடுதலை திரைப்படம் அதிகாலை முதலே வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் திண்ணப்பா திரையரங்கில் நடிகர் சூரி நடித்த விடுதலை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று அவரது ரசிகர்கள் கட்அவுட், வால்போஸ்டர், பேனர், தாரை தப்பட்டை  தடபுலாக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


திண்ணப்பா திரையரங்கம் அருகே உள்ள சூரி கட் அவுட்க்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த சில நாட்களாக பெரிய, பெரிய நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர் மன்றம் மூலம் பால் அபிஷேகம் உள்ளிட்ட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்து தற்போது கதையின் நாயகனாக அறிமுகமாக சூரி விடுதலை திரைப்படத்தை அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 




குறிப்பாக காமெடி நடிகராக அறிமுகமாக விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயனும், சந்தானமும், யோகி பாபு உள்ளிட்டோர் கதையின் நாயகனாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டு நிலையில் தற்போது "பரோட்டா சூரி" கதையின் நாயகனாக அறிமுகமாகி இன்று வெள்ளி திரைக்கு வெளிவந்திருக்கும் விடுதலை திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக மாறி உள்ளது. திரைத்துறையில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண