இணையத்தில் அவ்வப்போது வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். வெளிநாடுகளில் செல்லப்பிராணிகளாக எந்த விலங்கை வேண்டுமானாலும் வளர்த்துக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. ஆனால், இந்தியாவில் காட்டு விலங்குகள் பட்டியலில் வகைப்படுத்தப்பட்ட விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்க முடியாது.


இளைஞரை தாக்கிய சிங்கங்கள்:


இந்த நிலையில், ஜாகீத்கிஷார் என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில் பெண் சிங்கங்கள் இரண்டு இளைஞர் ஒருவரை அங்குமிங்கும் துரத்துகிறது. அதில் ஒரு சிங்கம் அவரது கையை கவ்விப்பிடிக்கிறது. அப்போது, பின்னால் இருந்து ஓடி வரும் நபர் ஒருவர் அந்த பெண் சிங்கங்களை விரட்டி விடுகிறார்.






ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஓடும் இந்த வீடியோவில் உள்ள இளைஞர்களையும், இடத்தையும் வைத்து பார்க்கையில் இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோவா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. லட்சக்கணக்கானோர் பார்த்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே பலரும் கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். சிலர் இந்த செயல் முட்டாள்தனமானது என்றும், சிலர் இந்தியாவில் எப்படி சிங்கங்களை வளர்க்க அனுமதித்துள்ளனர்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


குவியும் கண்டனங்கள்:


சிலர் இந்த சிங்கங்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ எந்த பகுதியில் எடுக்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஜாகித்கிசார் ‘சிங்கம் என்னை தாக்கியபோது’ என்று பதிவிட்டுள்ளார். இதனால், காவல்துறையினர் நேரடியாக அவரிடமே விசாரணை நடத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.