ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரண்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இயக்கியிருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக ராகவா லாரண்ஸ் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் 75 களில் திரைப்படம் கல்லூரியில் பிரபல இயக்குநர் சத்யஜித் ரே வின் மாணவனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். முதல் பாகத்தைப் போலவும் அதைவிட அழுத்தமான ஒரு கதைக்களத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கொண்டிருக்கிறது என்பதால் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியான பேட்ட படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் மற்றும் மகான் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாகின. தன்னுடைய முதல் படமான பீட்சா படம் ரிலீஸானபோது தனக்கு இருந்த அதே பதற்றம் தனக்கு இந்த முறையும் இருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.


வெற்றி திரையரங்கத்திற்கு சென்ற படக்குழு






இன்று வெளியாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ரசிகர்களுடன் பார்த்து அவர்களின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள  நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா, சந்தோஷ் நாராயணன் ஆகிய மூவரும் வெற்றித் திரையரங்கத்திற்கு சென்றுள்ளார்கள். படம் குறித்து இணையதளத்தில் சிறப்பான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன


ஜப்பான்






மறுபக்கம் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது. கார்த்தி நடிப்பில் வெளியாகும் 25 படம் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ப்ரோமோஷன்  வேலைகளை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்திருக்கும் ஜப்பான் படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க விஜய் மில்டன். கே எஸ் ரவிகுமார், சுனில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பான் இந்திய திருடராக கார்த்தி இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நிஜ சம்பவம் ஒன்றை கமர்ஷியல் திரைப்படமாக எடுத்திருக்கிறார் ராஜூ முருகன்.


ஜப்பான் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழும் வகையில் காசி திரையரங்கத்திற்கு சென்றுள்ளார் நடிகர் கார்த்தி. அங்கு அவருக்கு மாலைகள் அணிவித்து கெளரவித்தனர்.


ALSO READ | Japan Movie Review: கார்த்திக்கு கை கொடுத்ததா தீபாவளி ரேஸ்? ’ஜப்பான்’ போலாமா வேணாமா? முழு விமர்சனம் இதோ!