பாலிவுட் முன்னணி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஒரு படத்தில் 10 நாட்கள் நடிக்க 20 கோடி பெற்றுள்ளார். நான் 'பாலிவுட்டின் ஷெஹ்சாதா'. இதை பெற நான் தகுதியானவன் என பதிலளித்துள்ளார். 

 

 

10 நாட்களுக்கு 20 கோடி சம்பளம் :

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் நடிகர் கார்த்திக் ஆர்யன். தனது முதல் படமான பியார் கா பஞ்ச்நாமாவுக்காக ரூ 1.25 லட்சம் பெற்ற கார்த்திக்   ஆர்யன் தற்போது ஒரு படத்தில் நடிக்க பெற்ற சம்பளம் 20 கோடி. கோவிட் -19 நோய் தொற்று சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் 10 நாட்கள் நடிப்பதற்காக 20 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் நான் பாலிவுட்டின் ஷெஹ்சாதாவாக கருதப்படுவதால் இதற்கு நான் தகுதியானவன் என கூறியுள்ளார். 

10 நாட்கள் நடிக்க 20 கோடி சம்பளம் :

2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தமாக்கா'. இப்படத்தின் படப்பிடிப்பில் 10 நாட்கள் கார்த்திக் ஆர்யன் கலந்து கொள்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் ராம் மத்வானி அவருக்கு ரூ.20 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்.  இது குறித்து நடிகர் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் நேர்காணலில் 20 கோடி ரூபாய் வசூலிப்பது பற்றி அவர் பேசியுள்ளார். தயாரிப்பாளர்கள் ஏன் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கிறார்கள். இது ஒரு ஜோக் என ஹோஸ்ட்டிடம் கார்த்திக் ஆர்யன் கூற இது ஜோக் அல்ல என ஹோஸ்ட் கூறியுள்ளார். அதற்கு கார்த்திக் ஆர்யன் பதிலளிக்கையில் "நான் கொரோனா காலத்தில் இதைச் செய்தேன், ஆனால் எனது கட்டணத்தைப் பற்றி நான் விவாதிக்கலாமா என எனக்குத் தெரியாது. நான் 'தமாக்கா' படத்திற்காக கோவிட் -19 காலத்தில் நடிக்கையில் அது 10 நாட்களில் படமாக்கப்பட்டது. அது எனக்கு கிடைத்த பரிசு. எனது தயாரிப்பாளரின் பணத்தை 10 நாட்களில் அல்லது 20 நாட்களில் இரட்டிப்பாக்கினேன் என்றார். 

 

ஹீரோ நம்பர் 1 :

மேலும் 2022ம் ஆண்டில் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் வெளியான 'பூல் புலையா 2 ' ஒரு வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் ஆர்யன் தன்னை ஹீரோ நம்பர் ஒன் என கருத தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். "நான் எப்போதுமே என்னை நம்பர் 1 ஆக தான் பார்த்திருக்கிறேன். மெல்ல மெல்ல மக்களும் இதைத் தெரிந்து கொண்டு அதே வழியில் என்னைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மக்களின் அன்பு எனக்கு மிகவும் முக்கியமானது. நான் எனது ரசிகர்களின் அன்பிற்காக உழைக்கிறேன், அதனால்தான் நான் எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்க விரும்புகிறேன்" என்றார்.