சினிமா ரசிகர்களுக்கு நச்சுனு ஒரு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. பாலிவுட் நடிகர்களும் தென்னிந்திய நடிகர்களும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா, கார்த்தி, த்ரிஷா ஆகியோர் தீபிகா படுகோனே மற்றும் கபில் ஷர்மாவுடன் இணைந்து மெகா ப்ளாக் பஸ்டர் படம் ஒன்றில் நடிக்க போகின்றனர். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் ஒரே பட போஸ்டரை ஷேர் செய்து ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் திளைக்க செய்துள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன்பாக பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோனே அவரின் இன்ஸ்டாவில் அந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளார். அதற்கு , “ சப்ரைஸ் செப்டம்பர் நான்காம் தேதியில் ட்ரைலர் வெளியாகும்” என்ற கேப்ஷனை ஷேர் செய்துள்ளார். இதற்கு முன்னரே வியாழக்கிழமையில் நடிகை ராஷ்மிகாவும் அவரின் இன்ஸ்டாவில் ஃபன் ஸ்டஃப் என்றும் மெகா ப்ளாக் பஸ்ட்ர், ட்ரைலர் ஆகிய ஹாஷ்டாக்களை பதிவிட்டிருந்தார்.
இது போல் நடிகர் கார்த்தி அவரது ட்விட்டர் பக்கத்திலும், த்ரிஷா, கபில் ஷர்மா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் அவரவர் இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்தனர்.ரோஹித் ஷர்மாவும் இதே போல் போஸ்ட் செய்ததால், கிரிக்கெட் பிரியர்களும் பயங்கர சந்தோஷத்தில் உள்ளனர்.
தீபிகா படுகோனே
கார்த்தி
கபில் ஷர்மா
த்ரிஷா
ராஷ்மிகா மந்தனா
ரோஹித் ஷர்மா
செப்டம்பர் 4 ஆம் தேதிக்காக அனைவரும் காத்து வருகின்றனர். நடிகர் கார்த்தியுடன் த்ரிஷா மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.