நடிகர் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘கோல்டு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இது தொடர்பாக  ‘கோல்டு’ படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், “ படம் சம்பந்தமான பணிகள் காரணமாக  ‘கோல்டு’ படமானது ஓணம் பண்டிகை முடிந்து ஒரு வாரம் கழித்து வெளியாகும். இந்த தாமத்த்திற்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். இந்தத்தாமதத்தை எங்களது வேலை மூலமாக  சமன் செய்வோம்” என்று பதிவிட்டு இருக்கிறார். அதன் படி கோல்டு திரைப்படம் செபடம்பர்  15 அல்லது 16 ஆகிய தேதிகளில் வெளியாகும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்தப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Continues below advertisement

மலையாள பிரபல நடிகர் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ கோல்டு’. இந்தப்படத்தை ‘ நேரம்’  ‘ பிரேமம்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ளார்.  ‘பிரேமம்’ படத்தில் நடித்த நடிகை சாய்பல்லவிக்கு, அந்தப்படம் பெரிய பிரேக்காக அமைந்தது. 

 

அதனைத்தொடர்ந்து வந்த வாய்ப்புகளை சரியாக பயனபடுத்திக்கொண்ட சாய்பல்லவி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்  7 வருடங்களுக்கு பிறகு உருவாகியிருக்கும்  ‘கோல்டு’ படத்தை பிரித்விராஜின் மனைவியான சுப்ரியா மேனன், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். இந்தப்படத்தில் அஜ்மல் அமீர், சபரீஷ் வர்மா, கிருஷ்ணா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். முன்னதாக வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் டீஸரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.