சர்தார் படக்குழு, வடபழனியில் உள்ள பிரபல மாலில் படத்தின் ட்ரைலரை இன்று மாலை வெளியிடவுள்ளனர் என்ற தகவல் வெளியானது. அதையடுத்து படத்தின் ட்ரைலரை வெற்றிகரமாக வெளியாகிவுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வந்த திரைப்படம் "சர்தார்". கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. நடிகர் சூர்யா வெளியிட்ட டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி அன்று வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகும் என்றும் இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்பதையும் படக்குவினர் உறுதிப்படுத்தினர். பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அந்த வகையில், சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபாரம் மாலில் இன்று மாலை 7 மணிக்கு, சர்தார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா துவங்கியது. கார்த்தி மற்றும் சர்தார் படக்குழுவினரை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட பல ரசிகர்கள், இன்று விஜயா ஃபாரம் மாலுக்கு சென்று அவர்களை பார்த்தனர்.
இதற்கு முன்னதாக, கார்த்தி பாடிய “ஏறுமயிலேறி” என்ற பாடல் வெளியானது. நடிகர் கார்த்தி பாடிய முதல் பாடல் இதுவே. இந்த பாடலை கேட்கும் போது வேறு ஒருவரின் குரலை கேட்பது போல் இருந்தது. நடிகர் கார்த்தி, அவரின் சொந்த குரலை மாற்றி வித்தியாசமாகவும் நாட்டு புற பாடலிற்கு ஏற்ற பாணியை உள்வாங்கி உற்சாகத்துடன் பாடி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : Actor Dhanush: 'கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்'... காந்தாரா படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் தனுஷ்