பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் "சர்தார்". இப்படத்தில் ராஷிகண்ணா, லைலா, ரெஜிஷா விஜயன், முனீஷ்காந்த், அவினாஷ், மாஸ்டர் ரித்விக், யூகி சேது, முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் வில்லனாக மிரட்ட வருகிறார் பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே.
மிக முக்கியமான படம் :
"சர்தார்" திரைப்படம் தீபாவளி ரிலீசாக அக்டோபர் 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் தன படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீஸ் தினத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். அப்போது விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி " சர்தார்" திரைப்படம் தனது வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம். அதற்கு காரணம் இப்படத்தின் மூலம் நான் முதன் முறையாக ஒரு வித்தியாசமான கெட்-அப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் இன்று எனது அண்ணன் சூர்யா வரை பலரும் பல விதமான கெட்-அப்பில் நடித்துள்ளனர். நமது இயல்பான தோற்றத்தை காட்டிலும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பது என்பது சற்று சவாலான காரியம். அந்த வாய்ப்பை கொடுத்த இப்படம் என திரை வாழ்வில் மிகவும் ஸ்பெஷல் என கூறினார்.
ஸ்பின் - ஆஃப் திரைப்படம் அல்ல சர்தார்:
சர்தார் திரைப்படம் ஒரு ஸ்பை திரில்லர் திரைப்படம் என்பதை சொல்லி தான் நாங்கள் விளம்பர படுத்துகிறோம். இதுவரையில் இது போன்று வெளியான மற்ற படங்களை காட்டிலும் சற்று வித்தியாசமானது என்பதால் அதை நாங்கள் சஸ்பென்ஸாக வைக்க விரும்பவில்லை. இது குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு திரைப்படம். இதில் எந்த ஹாலிவுட் படத்தின் ஸ்பின் - ஆஃப் கிடையாது என கூறியிருந்தார் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 படத்தின் அமோகமாக வெற்றி பெற்றது. அதற்கு முன்னர் வெளியான விருமன் திரைப்படமும் வசூல் ரீதியாக கல்லா கட்டியது. இந்த இரு படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் மூன்றாவது திரைப்படம் "சர்தார்". இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி என கூறப்படுகிறது.