தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. தொடர் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து ரசிகர்களுக்கு சிறப்பான திரை விருந்தை கொடுத்து சந்தோஷத்தில் திகைக்கவைத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ரசிகர்கள்  மிகவும் ஆவலாக எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.


 



 


பொன்னியின் செல்வன் வெற்றியை அடுத்து உடனடியாக அடுத்த சர்ப்ரைசாக வெளியானது சர்தார் திரைப்படம். இரட்டை கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்த அப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த கார்த்தியின் இந்த ஆண்டு அவரின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். 


 






 


தற்போது நடிகர் கார்த்தி குக்கூ புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற பிரபலமான மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் WWE நிகழ்ச்சியின் விளம்பரத்தில் இணைந்துள்ளார் நடிகர் கார்த்தி. 


 






 


WWE நிகழ்ச்சியில் கார்த்தி: 



WWE நிகழ்ச்சி தற்போது சோனி ஸ்போர்ட்ஸ் நெட்ஒர்க்கில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் அசத்தலான விளம்பர படத்தில் நடிகர் கார்த்தி WWE சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது. வாரந்தோறும் செவ்வாய், புதன்  மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கும் அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி மாலை 8 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது எனும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கார்த்தி நடித்துள்ள இந்த WWE விளம்பரம் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தி கார்த்தி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.