பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க வந்தவர்களுக்கு காலை உணவு வழங்கி கார்த்தி ரசிகர்கள் அசத்தியுள்ளனர்.


மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.


இந்த படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என பலரும் தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் நிரம்பியுள்ளாதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் பொன்னின் செல்வன் 2 திரையிடப்படுகிறது. காலை முதல் காட்சியையொட்டி புதுச்சேரி மாநில கார்த்திக் ரசிகர் மன்றம் சார்பாக சண்முகா தியேட்டர் வாயில் முன்பு ரசிகர்கள் மற்றும் படம் பார்க்க வருபவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் பேனருக்கு பூமாலை தூவி ரசிகர்கள் படத்தை வரவேற்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண