விழுப்புரம் : தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, கட்டனம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகே மருதூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடத்தினை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை படிப்பிற்கான மையத்திலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
முதுநிலை படிப்பில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பூச்சியம் என மதிப்பெண் வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி... அண்ணாமலை பல்கலைகழகத்தில் பேப்பர் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் எடுத்த மதிபெண் தவறில்லாமல் வரும். திமுக ஆட்சியில் தான் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மையம் தொடங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊருக்கு வெளியே மையம் அமைக்கப்பட்டதால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. இது குறித்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் பேசி முதுநிலை மையம் விரிவுப்படுத்தப்படுத்தப்படும்.
பழைய கட்டனமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து பல்கலைகழகத்தில் அனைத்தும் சரியாக நடைபெறுகிறது. வழக்கனான நடைமுறையிலேயே மதிப்பெண் மதிப்பீடு பின்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்தில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தபப்ட்டுள்ளது. அனைத்து பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான கட்டனம், தேர்வு முறை மற்றும் பணியாளர் தேர்வு முறை பின்பற்றப்படும் என தெரிவித்தார். அமைச்சர் பேட்டியின் போது குறிக்கிட்ட கல்லூரி பேராசியர்: 50 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தால் பூச்சியம் என்றே வரும் என்றும். கிரேடு முறை பின்பற்றப்படுவதால் மதிபெண் வராது என்றும் இது ஏற்கனே நடைமுறையில் உள்ளதுதான் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்