Karthi - Vaa Vaathiyaar: எம்ஜிஆருடன் கைகோர்த்த கார்த்தி.. பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான டைட்டில், போஸ்டர்!
Karthi 26 Title Announced: நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 26ஆவது படம் பற்றிய அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களுள் ஒருவரான நடிகர் கார்த்தி இன்று தன் 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 26ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. “காதலும் கடந்து போகும்” படப்புகழ் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் இப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
வா வாத்தியார்!
எம்.ஜி.ஆர் ரசிகராக நடிகர் கார்த்தி இப்படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது எம்ஜிஆர் வேடமிட்ட பல நபர்கள் சூழ, கார்த்தி இடம்பெற்றிருக்கும் கூலான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கு “வா வாத்தியார்” எனப் பெயரிடப்பட்டு, படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Just In




டோலிவுட் நடிகை க்ரித்தி ஷெட்டி இப்படத்தின் மூலம் கார்த்தியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள நிலையில், சத்யராஜ் இப்படத்தில் வில்லனாகவும், நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
27ஆவது படம் மெய்யழகன்
இதனிடயே 96 பட இயக்குநர் பிரேம் குமார் உடன் கார்த்தி கைகோர்க்கும் கார்த்தி 27 படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்வித்தது. அதன்படி இப்படத்துக்கு மெய்யழகன் எனப் பெயரிடப்பட்டு கார்த்தி, அரவிந்த் சாமி இடம்பெற்றிருக்கும் போஸ்டர் ஒன்றும் நேற்று வெளியாகி வரவேற்பினைப் பெற்றது.
சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், ஸ்ரீதிவ்யா, சீரியல் நடிகை சுவாதி ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில் சென்ற ஆண்டு தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், வெளியீட்டுக்கு படக்குழு தயாராகி வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கம்பேக் தருவாரா?
வந்தியத்தேவனாக கார்த்தி கலக்கிய பொன்னியின் செல்வன் பட பாகங்களை அடுத்து, சென்ற ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அவரது 25ஆவது படமான ஜப்பான் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் கார்த்தி அடுத்தடுத்த இந்த இரண்டு படங்களும் குடும்ப சென்டிமெண்ட் படங்களாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் மூலம் கார்த்தி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புவார் என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
மேலும் படிக்க: PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!