கரீனா கபூர் தனது கர்ப்பகால அனுபவங்களை பிரக்னன்ஸி பைபிள் என்ற பெயரில் புத்தகமாக அவரது இன்ஸ்டகிராமில் லைவில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர், சைஃப் அலிகான் கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் கொண்டனர். இத்தம்பதிகளுக்கு 2016 ஆம் அண்டு தைமூர் அலிகான் என்ற ஆண் குழந்தைப்பிறந்தது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரீனாவும், சைஃப் அலிகானும் தங்களுக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்துள்ளதாக சோஷியல் மீடியாவின் வாயிலாக ரசிகர்களிடம் தெரிவித்திருந்தனர். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான் தனக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமில்லை 3 வதாக ஒரு குழந்தை உள்ளது என அவர் கர்ப்ப காலம் குறித்த அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டார். இதற்கு ”பிரக்னன்ஸி பைபிள்” என்ற பெயரிட்டு இன்ஸ்டகிராம் லைவில் அதனை வெளியிட்டிருந்தார்.
இப்புத்தகம் குறித்து தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்த கரீனா, தனது முதல் கர்ப்பத்தினை விட இரண்டாவது கர்ப்பம் மிகவும் கடினமாக இருந்தது தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று காலம் என்பதால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வது முதல் குழந்தையினைப் பெற்றெடுக்கும் வரை மிகவும் சிரமப்பட்டதாக தன்னுடைய கருத்தினை பகிர்ந்துள்ளார். இதோடு மட்டுமின்றி தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்று அச்ச உணர்வோடு தான் இந்த கர்ப்பக் காலத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மிகுந்த பயமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
இதுப்போன்று கர்ப்பகாலத்தில் தன்னுடைய அனுபவங்கள் அனைத்தையும் புத்தகங்கள் வாயிலாக கரீனா வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போது இப்புத்தகம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. கரீனா இப்புத்தகத்திற்கு பிர்கனன்ஸி பைபிள் என்று பெயரிட்டுள்ள நிலையில், மும்பையைச்சேர்ந்த ஆல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத்தின் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. அந்தப்புகாரில், பைபிள் என்பது கிறிஸ்தவர்களின் புனித நூல் என்றும், கிறிஸ்துவர்களின் மத உணர்வினை புண்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதுவரை போலீசார் தரப்பில் வழக்குப்பதிவு செய்யாமல் புகாரினை மட்டும் வாங்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வளவு சர்ச்சை ஏற்பட்டுள்ளப் போதிலும் பிரக்னன்ஸி பைபிள் புத்தகத்தை தனது மூன்றாவது குழந்தை என அழைத்துவரும் கரீனா கபூர் புத்தகத்தின் பெயரை இன்னும் மாற்றவில்லை.