தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜூன் , இவரது நடிப்பில் தற்போது புஷ்பா படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரேஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படம் மூலமாக மலையாள நடிகர் ஃபகத் பாசில் முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார். இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நாக சௌர்யா மற்றும் ரிது வர்மா நடித்திருக்கும் வருது காவலேனு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அல்லு அர்ஜூன் படக்குழுவினரை வாழ்த்தினார். அப்போது இனி வெளியாகும் திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று பாருங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அப்போது “தேசிய அளவிலும் கூட சூரியன்வன்ஷி திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தையும் கூட தியேட்டருக்கு சென்று பாருங்கள்! ஒட்டுமொத்த தென்னிந்த்தியா சார்பில் சூர்யன்வன்ஷி குழுவினருக்கு வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டிருந்தார்.
இப்படி தெலுங்கின் முன்னணி நடிகர் வேறு ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்தி படமான சூரியவம்ஷி படத்திற்கு புரமோஷன் செய்திருப்பதை கண்ட ரோகித் ஷெட்டி (சூரியவம்ஷி இயக்குநர்) ” நான் முன்பே சொன்னது போல இந்த என் படம் அல்ல, நம் படம்!... உங்களின் ஆதரவிற்கு நன்றி சகோதரா! ,உங்கள் புஷ்பா படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் , நீங்கள் உண்மையிலேயே ஒரு ராக் ஸ்டார்” என குறிப்பிட்டிருந்தார்இதனை கண்ட படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கரன் ஜோகர் , ரோகித் ஷெட்டி குறிப்பிட்டதை ரீ ட்வீட் செய்திருந்தார். அதில் “நீங்க ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் , அன்புக்கு நன்றி “ என குறிப்பிட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா திரைப்படம் 5 மொழிகளில் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே போல கொரோனா ஊரடங்கால் தாமதமான சூரியவம்ஷி திரைப்படம் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜய் தேவகன் , ரன்வீர் சிங், அக்ஷய் குமார் உள்ளிட்ட மூன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.