கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் மேடையில் பாடல் பாடியது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  நேற்று இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள் பாடல் ஒன்றை பாடினார். தற்போது இந்த பாடல் காட்சிகள் வைரலாகி வருகிறது. அரசியல் வாழ்க்கைக்கு முன்பாக திரைத்துறையில் கால் பதித்த திரு விஜய் வசந்த் அவர்கள் இதற்கு முன்பாக பல மேடைகளில் பாடி இருந்தார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் மேடையில் பாடிய காட்சிகள் கட்சி தொண்டர்களிடமும் பொது மக்களிடமும் வரவேற்பைப் பெற்றதோடு தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கூட்டத்தில் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், "அடுத்த உலக போர் பாரதிய ஜனதா கட்சியால் உருவாகலாம். நீங்கள் உங்களுடைய மதத்தை பரப்புங்கள், அல்லாஹ்வைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள். அல்லாவைப் பற்றி பேச முல்லா இருக்கிறார்.. உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை.. இதுவரை உள்ளூரில் தகராறு பண்ணி கொண்டு இருந்தீர்கள்.. இப்பொழுது உலகம் முழுவதும் தகராறு பண்ணுகிறீர்கள். 


சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை மகாபலிபுரத்தில் நடைபெற்ற உதய்பூர் காங்கிரஸ் கொள்கை பயிற்சி முகாம்...மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண