காந்தாரா உலகிற்கே அழைத்து சென்ற பர்ஸ்ட் லுக்.. வியப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்

கந்தாரா படம் கடந்த ஆண்டு உலகளாவிய சினிமா ரசிகர்களை கட்டி போட்டது. மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் அதன் நாட்டுப்புற அடிப்படையிலான கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தது. 

Continues below advertisement

கடந்த ஆண்டு வெளியான கந்தாரா: எ லெஜண்ட் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஹோம்பலே பிலிம்ஸ் தற்போது "கந்தாரா அத்தியாயம் 1" மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. 

Continues below advertisement

தெய்வீக பட அனுபவத்தை தரும் வகையில் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நடிகரும் இயக்குனருமான ரிஷாப் ஷெட்டி, மிரட்டலான மற்றும் வசீகரிக்கும் தோற்றத்தில் இந்த டீசரில் தோன்றுகிறார். இதன் மூலம் மீண்டும் நம்மை காந்தாரா உலகிற்கே கொண்டு செல்கிறார். முதல் பாகத்தில் அனைவரையும் வியக்க வைத்த அந்த கர்ஜனை இந்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளது. 

ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த காந்தாரா:

கந்தாரா அத்தியாயம் 1 படம் ஒரு புராணக்கதையாக முதல் பாகத்திற்கு முந்தைய காலத்தில் நடக்குமாறு இடம் பெற உள்ளது. இந்த டீசரில் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரத்தின் தீவிரமான தன்மை நம்மை அதில் மூழ்கடித்து, சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடத்தை ஏற்படுத்திய காந்தாரா படம், அதனை மீண்டும் அடுத்த ஆண்டும் ஏற்படுத்த உள்ளது.  

"காந்தாரா அத்தியாயம் 1" டீசர் ஏழு இந்திய மொழிகளில் வெளியாகி உள்ளது. கந்தாரா படம் கடந்த ஆண்டு உலகளாவிய சினிமா ரசிகர்களை கட்டி போட்டது. மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் அதன் நாட்டுப்புற அடிப்படையிலான கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தது. 

பான்-இந்திய சினிமா படங்களை வழங்குவதில் புகழ்பெற்ற ஹோம்பலே பிலிம்ஸ், "காந்தாரா அத்தியாயம் 1" மூலம் அதே பாணியை தொடர்ந்தது. ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, ஹோம்பலே பிலிம்ஸ் கடந்த ஆண்டில் பல வெற்றியைப் பெற்றது, "கேஜிஎஃப் 2" மற்றும் "கந்தாரா" ஆகிய இரண்டு மெகா பிளாக்பஸ்டர்களுடன் உலகளவில் 1600 கோடிகளை வசூலித்தது. 

டிசம்பர் இறுதியில் தொடங்கும் படப்பிடிப்பு:

இந்த ஆண்டு அடுத்து வெளியாக இருக்கும் சலார் படத்தின் மூலம் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த ஆண்டில் இந்த படமும் பிளாக்பஸ்டராக வாய்ப்பு உள்ளது, சலார் டிரெய்லர் டிசம்பர் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.  "கந்தாரா அத்தியாயம் 1" அடுத்த ஆண்டு 7 மொழிகளில் வெளியாக உள்ளது.  

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகி உள்ள பர்ஸ்ட் லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்திலும், மொழியியல் எல்லைகளைத் தாண்டிய ஒரு அற்புதமான அனுபவத்திற்கு கொண்டு செல்ல உள்ளது.

 

Continues below advertisement