பதினொன்று வார நீண்ட ஓட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக காந்தாரா திரைப்படத்தின் தியேட்டர் ரன் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது ஓரிரு தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். இந்த திரைப்படமானது இருவாரங்கள் முன்பு ஓடிடி-யில் வெளியான பிறகுதான் தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது. ஓடிடியில் பார்த்த பலரது விமர்சனம் எதிர்மறையாக இருந்த நிலையில் ஓட்டமும் குறையத் துவங்கியது. ஆனால் ஒன்பதாவது வாரத்தில் செய்த வசூலின் அடிப்படையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது வாரத்தில் தொடங்கி எட்டாவது வாரம் வரை இந்திய பாக்ஸ் ஆபிஸில் நான்கு வாராந்திர சாதனைகளை இப்படம் பெற்றுள்ளது. அதே சமயம் நான்காவது வாரத்தில் அதிக வசூல் செய்து இரண்டாவது பெரிய சாதனையைப் படைத்துள்ளது.



ரூ.400 கோடி வசூல்


இன்றுவரை இந்தியாவில் தோராயமாக ரூ.361 கோடிகள் மற்றும் வெளிநாட்டில் ரூ. 36 கோடிகள் என மொத்தமாக ரூ. 397 கோடிகள் வசூல் செய்துள்ளது. முழு ஓட்டத்தில் கிட்டத்தட்ட ரூ. 400 கோடியை எட்டியுள்ளது. கன்னட மொழி திரைப்படமான இது பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. மேலும் பல மைல்கற்களைத் தாண்டியுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கன்னட சினிமாவின் மிகப் பெரிய திரைப்படமான கேஜிஎஃப் அத்தியாயம் 2 ஐ வீழ்த்தி, எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற வரலாற்றை உருவாக்கியது.


தொடர்புடைய செய்திகள்: அய்யோ.. மீண்டும் புயல் சின்னமா? நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றைய வானிலை நிலவரம்..


மெதுவாக கூடிய வசூல்


இந்த எண்கள் மட்டுமே ஈர்க்கும் விஷயம் அல்ல, அவை எப்படி வந்தன என்பதும் புதிய விஷயம்தான். இது செப்டம்பரில் வெளியான முதல் நாளில் வெறும் ரூ.1.70 கோடிகள் மட்டுமே வசூல் செய்தது. ஆனால் அதன் இறுதி வசூல் இப்போது டிசம்பரில் 200 மடங்குக்கு மேல் என்று கணக்கிட்டுள்ளது. அதற்கு காரணம், இது பெருமளவில் கர்நாடகாவிற்கு வெளியே தாமதமாக வெளியிடப்பட்டதுதான். கர்நாடகாவில் இதன் வசூல் 100 மடங்கு இருந்தது. மேலும் கர்நாடகாவிற்கு வெளியேதான் இதன் ரீச் பெரிதாக இருந்துள்ளது. அதே போல் வட இந்தியாவில் இந்தி பதிப்பு 70 மடங்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. கேரளாவில் 40 மடங்கும் வசூல் செய்துள்ளது. பொதுவாக மற்ற மொழிப்படங்கள் அதிகம் ஈர்க்கப்படாத ஆந்திரா, தெலுங்கானாவில் கூட 17 மடங்கு லாபம் பார்த்தது.



காந்தாராவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் - மொழி வாரியாக:


கர்நாடகா - ரூ. 173.25 கோடி


ஆந்திரா/தெலுங்கானா (AP/TS) - ரூ. 59 கோடி


கேரளா - ரூ. 18.50 கோடி


தமிழ்நாடு - ரூ. 11.75 கோடி


இந்தியாவின் மற்ற பகுதிகள் - ரூ. 98.50 கோடி


பான்-இந்தியா - ரூ. 361 கோடி


காந்தாராவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் - நாடு வாரியாக:


வட அமெரிக்கா - $2,350,000


மத்திய கிழக்கு - $1,200,000


ஆஸ்திரேலியா/நியூசிலாந்து - $350,000


யுகே - $180,000


சிங்கப்பூர் - $100,000


ஜெர்மனி - $80,000


உலகம் முழுவதும் - $100,000


வெளிநாடு - $4,360,000 / ரூ. 36 கோடி


உலகம் முழுவதும் - ரூ. 397 கோடி