ஷிவராஜ்குமாருக்கு புற்றுநோய்

கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் அண்ணன் புனித் ராஜ்குமார் சில வருடங்கள் முன்பு  மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு ஒட்டுமொத்த கன்னட திரையுலகமே வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில்தான் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து சிவராஜ் குமார் கூறுகையில், “எனக்கு நோய் இருப்பது உண்மைதான். ஆனால் அது புற்று நோய் இல்லை. அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதும் உண்மைதான். அந்த நோய் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை." என தெரிவித்தார். இந்நிலையில் ஷிவராஜ்குமார் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி  சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பிச் சென்றார். அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் மியாமி புற்று நோய் சிகிச்சை மையத்தில் கடந்த 24 ஆம் தேதி  அவருக்கு சிகிச்சை நடைபெற்றது.

சிறுநீரக பையில் புற்று நோய்

 அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் ஷிவராஜ்குமாரின் மருத்துவர் மற்றும் ஷிவராஜ்குமாரின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டு ஷிவாண்ணாவின் உடல் நிலை குறித்து தெரிவித்துள்ளார்கள். " ஷிவாண்ணாவிற்கு சிறுநீரக பையில் புற்று நோய் அறிகுறிகள் இருந்தன. இந்த சிறுநீரக பையை தற்போது நீக்கியுள்ளோம். அதற்கு மாற்றாக ஷிவாண்ணாவின் குடலில் இருந்து உருவாக்கப்பட்ட மற்றொரு சிறுநீரக பை பொருத்தப்பட்டுள்ளது. கடவுளின் அருளாலும் நிறைய பேரின் பிரார்த்தனைகளாலும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அறுவை சிகிச்சையின் போது ஷிவாண்ணா ரொம்பவும் நிதானமாக இருந்தார். உடல் ரீதியாகவும் மனதளவிலும் அவர் ரொம்ப உறுதியாக ஒரு மனிதர். பரிசோதனை முடிவுகளின்படி அவர் தற்போது பூரண குனமடைந்துள்ளார். கூடிய விரைவில் அவர் உடல் நிலை மேம்படும் என எதிர்பார்க்கிறோம்." என மருத்துவம் தெரிவித்துள்ளார்

சிகிச்சை முடிந்து ஒரு மாத கால ஓய்விற்கு பின் ஜனவரியில் அவர் மீண்டும் பெங்களூரு திரும்ப இருக்கிறார்.