MI squad IPL 2024: ஐபிஎல் 2024 வீரர்களுக்கான ஏலத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மொத்த வீரர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் 2024 ஏலம்:
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், தற்போது சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் 40 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த தொடரை, கிரிக்கெட் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் இந்த தொடரில் பங்கேற்க, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் நேற்று துபாயில் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில், 10 அணி நிர்வாகங்களும் தங்களுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்க உள்ளது. ஏலத்திற்கு முன்பு 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 17 பேர் மும்பை அணியில் இடம்பெற்று இருந்தனர். 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 வீரர்கள் தேவைப்பட்ட நிலையில், 17.75 கோடியை கையிருப்பாக கொண்டிருந்தது.
மும்பை அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள்:
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், ஜெரால்ட் கோட்ஸி (ரூ. 5 கோடி), தில்ஷன் மதுஷங்கா (ரூ. 4.60 கோடி), ஷ்ரேயாஸ் கோபால் (ரூ. 20 லட்சம்), நுவான் துஷாரா (ரூ. 4.80 கோடி), நமன் திர் (ரூ. 20) லட்சம்), அன்ஷுல் கம்போஜ் (ரூ. 20 லட்சம்), முகமது நபி (ரூ. 1.5 கோடி), ஷிவாலிக் ஷர்மா (ரூ. 20 லட்சம்) ஆகியோரை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. முன்னதாக குஜராத் அணி கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை, மும்பை அணி டிரேடிங்கில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியில் காலியாக உள்ள உள்நாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டுகள்: 0
சென்னை அணியில் காலியாக உள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டுகள்: 0
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:
ரோகித் ஷர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெபர்ட் ஹர்திக் பாண்டியா (கேப்டன்) ஜெரால்ட் கோட்ஸி, தில்ஷன் மதுஷங்கா, ஷ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா.