கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கங்குவா படத்தின் இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. 





கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய கங்குவா படத்தின் படப்பிடிப்பு 17 மாதங்கள் தொடர்ந்தது. சென்னை , கோவா , கேரளா , கொடைக்கானல் , ராஜமுந்திரி  உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சுமார் 350 கோடி பொருட்செலவில் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் கங்குவா. இந்த ஆண்டு ஜனவரி மாதம் படபிடிப்பு முடிவடைந்து போஸ் ப்ரோடக்‌ஷன் பணிகள் தொடங்கின. வெற்றி பழனிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஷாத் யுசுஃப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தமிழ் , இந்தி , கன்னடம் , மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாக இருப்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டை மூன்று மொழிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கங்குவா படத்திற்கு பான் இந்திய அளவில் ப்ரோமோஷன்கள் செய்ய இருப்பதால் படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் வெளியிடப் பட்டுள்ளது.